*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்த சிறுகதைத்தொகுதி வெளிவந்துவிட்டது விலை 240 ரூபாய்.தருமராசா அஜந்தகுமார் உயர்தரமாணவர்களுக்காய்த் தொகுக்கும் உரைநடைக்கோவை விரைவில் வெளிவருகிறது *

ஞாயிறு, 13 ஜூன், 2010

மாதிரிப் பரீட்சை

முதலாம் பகுதியிலுள்ள மூன்று வினாக்களுக்கும், இரண்டாம், மூன்றாம்
பகுதிகளிலிருந்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வினாவையேனும் தெரிந்தெடுத்து மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடை எழுதுக.

                                    பகுதி - I
1.    பின்வரும் கட்டுரைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுசெய்து 350 சொற்களுக்குக் குறைவுபடாமல் கட்டுரை வரைக.
    i)    பேராசிரியர் க. கைலாசபதியின் தமிழ்ப்பணிகள்
    ii)    ஈழத்தில் குழந்தை இலக்கியம்
    iii)    அறிவியற் தமிழ்
    iஎ)    இன்றைய விஞ்ஞான வியப்புகள்
    எ)    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

2.    பின்வரும் ‘அ’ உரைப்பகுதியையும் ‘ஆ’ பாடற்பகுதியையும் வாசித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
    (அ)    மொழிபெயர்ப்பில் இரண்டு பிரதான பிரச்சனைகள் உள்ளன.  ஒன்று கலைச்சொல்லாக்கம்.  மற்றது பிறமொழிச் சொற்களை தமிழில் எழுதுதல்.  இவை இரண்டும் மொழி வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.  இவ்விரு அம்சங்கள் பற்றியும் பாரதியிடம் திட்டவட்டமான சில கருத்துக்கள் இருந்தன.  கலைச் சொல்லாக்கத்தின் அவசியத்தை பாரதி நன்கு உணர்ந்திருந்தார்.  “கூடியவரை சாஸ்திர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோருக்கு அதிக சிரமம் இராது” என அவன் எழுதினான்.  தேசம் முழுவதிலும் கலைச் சொல்லாக்கத்தில் ஓர் ஒருமைப்பாடு விளங்கவேண்டும் என்பதும் பாரதியின் கருத்தாய் இருந்தது.  இதன் பொருட்டு சமஸ்கிருத மொழியை கலைச்சொல்லாக்கத்தின் பொது மொழியாகக் கொள்ளலாம் என்பதும் பாரதியின் கருத்தாகும்.  இதுபற்றி ‘பரிபாஷை சேகரிக்க ஓருபாயம்’ என்னும் தலைப்பில் பின்வரும் குறிப்பொன்றை பாரதி எழுதியுள்ளார்.  ‘ஸ்ரீ காசியிலே நாகரிக பிரசாரணி சபையார் ஐரோப்பிய சங்கேதங்களை எல்லாம் எளிய சமஸ்கிருத பதங்களில் போட்டு மிகப்பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள்.  இந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம்.  ஐரோப்பாவில் எல்லாப் பாஷைகளும் இவ்விதமாகவே இலத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன.  இவ்வாறு செய்தால் நமது தேச பாஷைகளில் சங்கேத ஒற்றுமை ஏற்படும்.  அதனால் சாஸ்திரப் பயிர் தேசம் முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்’ என்பது பாரதி கருத்து.
        i)    மேற்படி பந்தியில் ஆசிரியர் கூறியவற்றை 30 சொற்களுக்குள் சுருக்கியெழுதுக.
        ii)    மேற்படி பந்தி மூலம் ஆசிரியர் கூறவந்த விடயம் என்ன?
        iii)    பாரதியின் கலைச் சொல்லாக்கம் பற்றிய நிலைப்பாடு யாது?
    (ஆ)     ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
        மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டா
                “நமக்கும் அது வழியே நாம் போம் அளவும்
        எமக்கும் என்” என்று இட்டு உண்டு இரும்
        i)     மேற்படி செய்யுளிள் கருத்தை 30 சொற்களுக்கு குறையாமல் விரித்து எழுதுக.
        ii)    “நமக்கும் அது வழியே” என்பதன் அர்த்தம் என்ன?
        iii)    இச்செய்யுள் மூலம் ஆசிரியர் புலப்படுத்த விரும்புவது யாது?

3.      மேல்வரும் பதினைந்து வினாக்களுக்கும் (அ), (ஆ), (இ) என மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பகுதியிலுமிருந்து குறைந்தது இரண்டு வினாக்களையேனும் தெரிந்து எல்லாமாகப் பத்து வினாக்களுக்கு மட்டும் விடைதருக.
    (அ)    i)     பாவம், மஞ்சள், பயிற்சி, சபை, கஞ்சி, தேர்ச்சி, மச்சம் ஆகிய சொற்களை சகர ஒலி வேறுபாட்டிற்கேற்ப பாகுபடுத்துக.
        ii)     மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எவை?
        iii)    பனங்கிழங்கு, பதிற்றுப்பத்து ஆகிய சொற்களில் வந்துள்ள பகுபத உறுப்புகளை பிரித்து இனங்காட்டுக.
           IV)     இறந்த கால இடைநிலைகள் இரண்டும் அதற்கு உதாரணமும் தருக.
        V)    நாவலர் வீதி, சிவபெருமான், விநாயக்கடவுள், குமரக்கோட்டம் இவை எவ்வகைத் தொகைகள்?
    (ஆ)      VI)    முயல், தடு, கொடு, கல் ஆகிய வினையடிகளைக் கொண்டு புதிய பெயர்ச்சொற்களை உருவாக்குக.
        VII)     வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. இதில் வந்துள்ள வேற்றுமை உருபு என்ன? என்ன பொருளில் வந்துள்ளது?
        VIII)    பறவைகள் எல்லாம் பறக்கும்
                 பறக்கும் தட்டைப் பறவைகள் பார்க்கும்
            இதில் வந்துள்ள பறக்கும் என்பதன் இலக்கணத் தொழிற்பாட்டை வேறுபடுத்திக் கூறுக.
             IX)      கண்ணன் பானையை உருட்டுவித்தான், அப்பா எங்களைப் படிப்பித்தார்
                 இதில் வந்துள்ளவை எவ்வகை வினைகள்?
        X)     காட்டு, வா ஆகியன முதல் வினையாகவும் துணை வினையாகவும் வரும் வகையில் ஒவ்வொரு வாக்கியம் அமைக்குக.
    (இ)     XI)     அவன்தான் என்னை இங்கே வரச் சொன்னான்
            நான்தான் அவனை யாரோடும் கதைக்கவேண்டாம் என்றேன்.
            இவற்றில் வந்துள்ள “தான்” என்பதன் இலக்கணத் தொழிற்பாட்டினை வேறுபடுத்துக.
        XII)     காஞ்சிவரம் திரைப்படத்தினைப் பார்க்குமாறு ஆசிரியர் எனக்குக் கூறினார்.
            இதில் வந்துள்ள தலைமை வாக்கியம் எது?
        XIII)     ஒரு இரவிலேயே நான் எல்லாவற்றையும் படித்து முடிப்பேன் . இதில் வந்துள்ள இலக்கண வழுவைத் திருத்தி எழுதுக.
             XIV)     இரண்டு கண்களும் சிவந்தது. இதில் வந்துள்ள இலக்கண வழுவைச் சுட்டுக.
        XV)     கலப்பு வாக்கியத்திற்கு ஓர் உதாரணம் தருக.

                                  பகுதி - II

4.     (அ)    சங்ககாலத்தில் தோன்றிய ஆற்றுப்படை உருவ, உள்ளடக்க ரீதியில் அக்காலத்திலேயே வளர்ச்சி அடைந்த ஆற்றினை விளக்குக.
    (ஆ)     சங்ககாலத்தில் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையே மிகுந்த நல்லுறவு இருந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.

5.     (அ)     நாயக்கர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை வகைப்படுத்தித் தருக.
    (ஆ)     அக்காலத்துப் பொதுமக்கள் சார்ந்த இலக்கியங்களின் பொதுப்பண்புகளை விளக்குக.

6.     (அ)     ஐரோப்பியர்களின் வருகையினால் எமது மொழியில் ஏற்பட்ட மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் விளக்குக.
    (ஆ)     அதில் அந்நாட்டு அறிஞர்களின் பங்களிப்பைச் சுருக்கமாகத் தருக.

பகுதி - ஐஐஐ
7.     (அ)    ஆரிய சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
    (ஆ)  அக்கால இலக்கிய வளர்ச்சியில் அரசகேசரி போன்ற மன்னர்களின் பங்களிப்பை விளக்குக.

8.     (அ)    18 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய இலக்கியங்களை வகைப்படுத்தித் தருக.
        (ஆ)     ஈழத்தில் தோன்றிய புராணங்கள் பற்றிக் கருத்துரைக்குக. 

9.     மேல்வருவோருள் யாரேனும் இருவர் இலங்கைத் தமிழ் இலக்கியவளர்ச்சியில் பெறும் முக்கியத்தவத்தை விளக்குக.
    i)    பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை    
         ii)    நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
    iii)    யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவர்   
        IV)    சி.வை. தாமோதரம்பிள்ளை
    V)    புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

மாதிரிப் பரீட்சை

        
                                         பகுதி 1

முதலாம் பகுதியில் இரு வினாக்களுக்கும் இரண்டாம் பகுதியில் உள்ளவற்றில் எவையேனும்
நான்கு வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடைதருக.
1.    பின்வரும் செய்யுட் பகுதியில் உள்ள எவையேனும் மூன்றினைத் தெரிவுசெய்து
    அ)     அவற்றின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக.
    ஆ)     தடித்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளவற்றின் சிறப்பினை எழுதுக.
    1.    உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
        அமிழ்த மியைவ   தாயினு மினிதென
        தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
        துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்
        புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
        உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
        அன்ன மாட்சி அனைய ராகித்
        தமக்கென முயலா நோன்றாட்
        பிறர்க்கென முயலுன ருண்மையானே

    2.     அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடைந்து
        சால்பூ ன்றிய தூண்
        சால்பிற்கு கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார்
        கண்ணுங் கொளல்
        தொல்வரவுந் தோலங் கெடுக்கும் தொகையாக
        நல்குரவு என்னும் நசை
        இன்மையென ஒரு பாவி மறுமையும்
        இம்மையும் இன்றி வரும்

    3.     கந்தமும் தவத்தோர் கதிகளும் நிறைந்து
            கடல் வளை புவி தொடாது உயர்ந்து
        தந்த வெண்பிறை பாந்தளும் வரிப்புலியும்
            தாழ்ந்து பாதலம் கடந்து உருவி
        அந்தரம் அவனி கதிர்மதி அமைத்தோன்
            அறுசினில் கபுசொடு நடந்து
        சுந்தரம் குலவு முஸ்தபா சரணம்
            தொடும் இரு கைகளே கைகள்

    4.    எய்திய வேலையிற் தமியள் எய்திய
        தையலை நோக்கினன் சாலை நோக்கி;னான்
        கைகளில் கண்மலர் புடைத்துக் கால்மிசை
        ஐயன் அப்பரதன் விழுந்தர ற்றினானரோ

        வெந்துயர் தொடர்தர விம்மி விம்மி நீ
        ருந்திய நிரந்தர மூற்று மாறில
        சிந்திய குரிசிலச் செம்மல் சேந்த கண்
        ணிந்தியங் களிலெறி கடலுண் டென்னவே

2.     ~அ| பகுதியிலுள்ள கவிதையைப் படித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
அல்லது
    ‘ஆ’ பகுதியிலுள்ள உரைப்பகுதியை வாசித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடைதருக.

    அ)    முள்ளுடைச் சிறு செடியின் - கனவாய்
            மூண்டு சிரித்த மலர்
        கள்ளெனும் பொக்கிஷத்தால் - விம்மியே
            கர்வம் அடைந்த மலர்
        பனித்துளி மணி சூடித் - தென்றலின்
            பாட்டினைக் கேட்ட மலர்
        கனிந்துள விண்ணதன் கீழ் - மௌனக்
            கல்வியைக் கற்ற மலர்

        அந்திச் சிவப்பினையும் - விண்மீன்
            அழகின் விழிப்பினையும்
        சிந்தையிற் கொண்ட மலர்- மணமே
            செய்து திளைத்த மலர்

        வீழ்ந்து கிடக்குதையோ - உச்சி
            வெயிற் சுடலையிலே
        வாழ்வின் விருப்பங்களை - மண்ணிலே
            வரைந்துளNதூ வண்டே?

    1.     உதிர்வதன்முன் மலர் இருந்த நிலையைக் கவிஞர் எப்படியெல்லாம் கூறுகின்றார்?
    2.     உதிர்ந்த மலர் கவிஞரின் உள்ளத்தில் உண்டாக்கும் உணர்ச்சியை விளக்குக.
    3.     இக்கதையூடாக கவிஞர் கூறவந்த விடயத்தை விளக்குக.

    ஆ)    அதோ வெண்கலத்தோணியில் ஒரு பெண் பேசுவது கேட்கிறதே. அது யாரது? அந்தப் புடவைக் கட்டிலிருந்தும் பாய்ச்சல் நடையிலிருந்தும் நாகம்மாளாகத்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக்கொண்டிருப்பீர்கள். ஆமாம் நாகம்மாள்தான். சுழிக்கும் மின்னல் போல அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கிறாள். சற்றைக்கொரு தரம் ராமாயியிடம் வந்து கல்லை சரியாகத் தள்ளிவை. கரண்டியை அந்தப்பக்கம் வைக்காதே. குழந்தையைப் பார்த்துக்கொள், அடுப்பண்டையைப் போகப்போகுது: ராமாயிக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கஸ்டப்பட்டு கஸாயம் குடிப்பதைப்போல பொறுமையுடன் ஏற்றுக்கொண்டாள். சிலசமயம் தனக்கே இதெல்லாம் தெரியும் என்பாள்.  உடனே நாகம்மாளுக்குப் பிரமாதமாகக் கோபம் வந்துவிடும்! அப்படியோ, இதோ நான் போய்விடுகிறேன் என்று நாலு எட்டு வைத்துவிட்டு திரும்பி., உனக்காக நான் போய்விட்டால் பின்னே என்ன இருக்கிறது? என்று நின்று கொண்டு உருட்டி விழிப்பாள். அங்கு கடல் ஒலிபோல் முழங்கும் அத்தனை கதம்பக் குரல்களையும்  ராமாயியினால் சகித்துக்கொண்டு சந்தோசமாகப் பார்க்கமுடிந்தது. ஆனால் கெட்டியப்பன் அங்கு செய்யும் அட்டகாசங்களைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. காட்டுராஜா போல் கண்களை எதற்கு அவ்வளவு சிவப்பாக்கிக் கொண்டிருந்தானோ? பெரும் காற்றைப்போல் கும்பலில் அங்கும் இங்கென்று அலைந்து கொண்டிருந்தான். ஒரு கடைக்காரனை அந்த இடத்தில் சாமான் விற்கக்கூடாதென்பான்.  ஒரு புறமாயிருக்கும் தோரணத்தை அறுத்துவிடுவான். எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒரு சக்கிலிப்பெண் கல் அடுப்பு கட்டி அப்போதுதான் நெருப்பு மூட்டுவாள்.  அதை அவன் காலால் தெரியாததுபோல் மிதித்துவிட்டுச் செல்வான்.  ராமாயி இதையெல்லாம் பார்த்து பேசாமல் இருப்பாள்.
        1.    இப்பகுதி மூலம் வெளிப்படும் நாகம்மாளின் பண்புகளைக் குறிப்பிடுக.
        2.    கெட்டியப்பன் பற்றி உம் மனதில் தோன்றுவதைக் குறிப்பிடுக.
        3.    ஆசிரியரின் மொழிநடைச் சிறப்புப் பற்றி கருத்துரைக்க.

                                       பகுதி – ii

3.    நாணுடைமை என்னும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு
    அ)    நாணினது இலக்கணமும் சிறப்பும்
    ஆ)    நாணுடையாரது சிறப்பும் அவர் செயலும்
    இ)    நாணில்லாரது இழிவு
    ஈ)    வள்ளுவரின் உவமையணி ஆற்றல்

4.    திருவடிசூட்டுப் படலத்தில் தசரதன் இறந்த செய்தியை அறிந்தது முதல் நீர்க்கடன் செய்தது வரையான பகுதியை அடிப்படையாகக் கொண்டு
    அ)    தசரதனிடத்து இராமன் கொண்டிருந்த பாசம்
    ஆ)    தசரதனின் பெருமை
    இ)    சூரியகுலப் பெருமை
    ஆகியவற்றை விளக்குக.

5.    கலிங்கத்துப்பரணியிலுள்ள காடு பாடியது என்ற பகுதியில் வெளிப்படும்
    அ)    மரஞ்செடி கொடிகள் பற்றிய வர்ணனை
    ஆ)    வெம்மையினை வெளிப்படுத்த கையாண்ட அணிகள்
    இ)    குலோத்துங்க சோழனின் வீரம்
    ஆகியவற்றை விளக்குக.

6.    ஏ. என். சிவராமனின் ~பிணைக்கப்பட்ட கடனைவிட வெளி முதலீட்டை வரவேற்பதே நலம்| என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு
    அ)    வெளியார் முதலீடு என்ற பதம் குறிக்கும் இரண்டு கருத்துநிலைகள் எவை?  அவற்றிற்கிடை         யிலான பிரதான வேறுபாடுகள் எவை?
    ஆ)    வெளி முதலீட்டை வரவேற்பது நலமானது என்பதற்கு ஆசிரியர் கூறும் காரணங்கள்?
    இ)    வெளி முதலீட்டால் வரக்கூடிய தீமைகள்?
    ஈ)    தனது கருத்தை வெளிப்படுத்த ஆசிரியர் கையாண்ட மொழிநடை
    ஆகியவற்றை விளக்குக.

7.    மகாகவி பாரதியாரின் ~எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி| எனத் தொடங்கும் கவிதையிலும் ~வாழ்க நீ எம்மால்| எனத் தொடங்கும் கவிதையிலும் பாரதியாரின்,
    அ)    நாட்டுப்பற்றுக்கான காரணங்களையும்
    ஆ)    மகாத்மா காந்தி மேல் அவர் கொண்ட மதிப்பிற்கான காரணங்களையும்
    இனங்காண்க.

8.    ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு
    அ)    கதைத் தலைப்பின் பொருத்தப்பாடு
    ஆ)    முருகதாசரின் எழுத்துலகக் கனவும் அதற்கு நேர்ந்த கதியும்
    இ)    அலமு என்ற பாத்திரத்தின் முக்கியத்துவம்
    ஈ)    குடியிருந்த வீடு
    உ)    புதுமைப் பித்தனின் கதை சொல்லும் திறன் ஆகியவற்றை சுருக்கமாக விளக்குக.

9.    பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினை விளக்குக.
    அ)    தவப்பயன் என்ற சிறுகதையில் வெளிப்படுத்தப்படும் பிரதான செய்தியை விளக்குக.
    ஆ)    தமிழும் பிறமொழியும் கட்டுரையில் கூறப்படும் தமிழுக்கும் ஏனைய திராவிட மொழிகளுக்குமான         தொடர்பு
    இ)    இரட்சணிய யாத்திரிக சிலுவைப்பாடு பகுதியில் இயேசுபிரான் கல்வாரி நோக்கிச் சென்றமைக்கான         காரணங்களும் அவர் பட்ட துன்பங்களும்
    ஈ)    கன்னியாய்த்திரு என்ற பாடலில் புலவர்மணியின் இயற்கை நேசமும் சமூக நோக்கும்
    உ)    மாமலர் முண்டக பாடலில் தோழியின் மதிநுட்பம்