*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்த சிறுகதைத்தொகுதி வெளிவந்துவிட்டது விலை 240 ரூபாய்.தருமராசா அஜந்தகுமார் உயர்தரமாணவர்களுக்காய்த் தொகுக்கும் உரைநடைக்கோவை விரைவில் வெளிவருகிறது *

திங்கள், 24 மே, 2010

மாதிரிப்பரீட்சை 3

முதலாம் பகுதியிலுள்ள மூன்று வினாக்களுக்கும், இரண்டாம், மூன்றாம் பகுதிகளிலிருந்துஒவ்வொன்றிலும் ஒவ்வொருவினாவையேனும் தெரிந்தெடுத்து மூன்று வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடைஎழுதுக.

பகுதி–I

1. பின்வரும் கட்டுரைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவுசெய்து 350 சொற்களுக்குக் குறைவுபடாமல் கட்டுரைவரைக.
i) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தமிழ்ப்பணிகள்
ii) இணையத்தில் இலக்கியம்
iii) விண்வெளிஆய்வுகள்
iஎ) நாட்டார் கூத்துக்களின் இன்றையநிலை
எ) பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுதல்


2. பின்வரும் ‘அ’ உரைப்பகுதியையும் ‘ஆ’ பாடற்பகுதியையும் வாசித்து அதன் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
(அ) இந்தியதத்துவமரபில் வந்த ஒரு கோட்பாடு சாசுவதம். சாசுவதநெறி என்பது தர்மம், நீதி,நம்பிக்கை, சமூகஅமைப்பு முதலியன சாசுவதமானவை என்பது இக் கோட்பாட்டின்முடிவு. சாசுவதம் என்றால் நித்தியம், அசையாநிலை, நிலைபேறுடைமை, மோட்சம் என்றெல்லாம் பொருள்படும். உதாரணமாக சனாதனதர்மம் சாசுவதமானது என்றே பிராமணியம் கூறும.; தத்துவக் கூறுகளைப் போலவே அவற்றுக்கு ஆதாரமான பௌதீகப் பொருளான சமுதாய அமைப்பும் சாசுவதமானது என்றே சனாதனிகள் கூறுவர். தர்மம், நீதி என்பன நித்தியமானவை, அசையாநிலைபெற்றவை என்று கூறினர். பின்பு அவற்றில் மாற்றம் என்பதற்கு இடம் ஏது? இது நிலையியற் கொள்கையாகும். சாசுவதமானது எதுவுமே இல்லை இயற்கையில் உள்ள அனைத்துமே இடையறாத இயக்கத்திற்கு உட்பட்டவை என்பது இவ்விவாதத்தின் அடிப்படை. பௌத்தம் போன்ற அவைதீகநெறிகள் இக்கொள்கையைக் கருத்துமுதல்வாத நோக்கில் முன்வைத்தன. அவற்றின் வழியாகவே இந்திய தத்துவஞானமரபில் பண்டைய இயக்கவியல் முகிழ்த்தது சாசுவதக் கோட்பாட்டின் பிடிப்பு பாரதியாரில் சிறிதளவு இருந்ததை மறுக்கமுடியாதாயினும் சமூகம், கலைகள், இலக்கியம் முதலியவற்றில் மாற்றத்தை விதியாகக் கொண்ட இயக்கவியலைப் பாரதியார் உணர்வுரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதையும் மறுக்க இயலாது. பாரதியாரின் இறுதிக்காலத்தில் பாடப்பெற்றதாகக் கருதப்படும் “உயிர் பெற்ற தமிழர் பாட்டு” இதற்கு முழுமையான வடிவம் கொடுத்துள்ளது.

i) மேற்படிபந்தியை 30 சொற்களிற்குக் குறையாமல் சுருக்கிஎழுதுக.
ii) இயக்கவியற் கொள்கையின் முக்கியத்துவம் யாது?

(ஆ) களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத் தோராயினும் கற்றறிந்தோரைத்
தலைநிலத்துவைக்கப்படும்

i) இச்செய்யுள் கூறும் கருத்தை உமது நடையில் 30 சொற்களுக்குக் குறையாமல் விரித்துஎழுதுக.
ii) இச்செய்யுள் கூறும் பிரதான செய்தி என்ன?
iii) வந்துள்ள அணியை விளக்குக.


3. மேல்வரும் பதினைந்துவினாக்களுக்கும் (அ), (ஆ), (இ) என மூன்றுபகுதிகளாகத் தரப்பட்டுள்ளன ஒவ்வொரு பகுதியிலிருந்தும் குறைந்தது இரண்டுவினாக்களையேனும் தெரிந்துஎல்லாமாகப் பத்துவினாக்களுக்குவிடைதருக.

ஐ. கவிஞன்,அகம்,காருண்யம்,கஞ்சன்,அங்கம்,காரிருள்,திகதி,பற்கள்,கண்கள் ஆகிய சொற்களை ககர ஒலி வேறுபாட்டிற்கமைய பாகுபடுத்துக.
ஐஐ. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்பதில் வந்துள்ள எழுத்துப் போலியை சுட்டி திருத்தி எழுதுக?
ஐஐஐ. அக்கா, நட்பு, அன்பு, கட்சி, செல்வம் இவற்றுள் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் இடம்பெறும் சொற்களை இனங்காணுக.
ஐஏ. பஃறொடை, அஃறிணை, முஃடீது இவற்றில் வந்துள்ள ஆய்தத்தின் மாத்திரை எத்தனை?
ஏ. பாலின் இனிய சொல், மானின் மருண்ட விழி என்பவற்றில் வந்துள்ள வேற்றுமை உருபு என்ன? என்ன பொருளில் வந்துள்ளது?

ஏஐ. மலர்மணம், வாட்கண், நானிலம், செவ்வானம், நிறைகுடம், பாலபழம் இவை எவ்வகைத் தொகைகள்?
ஏஐஐ. நீ அங்கு போகாதது நல்லது என்பதில் போகாதது என்பது எவ்வகைப் பெயர்?
ஏஐஐஐ. காலையில் எழுந்து கடவுளைத் தொழு, உலகத்தோடு ஒட்டி வாழ் இவற்றில் வந்துள்ள வினை எவ்வகை வினை?
ஐஓ. கொழும்பில் இருந்து வருவோர் யாழ்ப்பாணத்தில் அரிய காட்சிகளைக் காண்பர். இதில் வருவோர் என்பது எவ்வகைப் பெயர்?
ஓ. ஆசிரியர் எழுதித் தரச்சொன்னார், நீ இப்படிப் போனால் உருப்படமாட்டாய். இவற்றில் வந்துள்ள எச்சம் எவ்வகையினது?

ஓஐ. நீங்கள் இங்கே வரவேண்டாம், நான் எப்போதாவது சிரிப்பேன், நீங்கள் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது இவற்றில் வந்துள்ள அடைகள் எவ்வகை? என்ன பொருள்களி;ல் வந்துள்ளன?
ஓஐஐ. நீங்களாவது என்னுடைய சொல்லைக் கேட்பீர்களா? இதில் வந்துள்ள இடைச்சொல்? என்ன பொருளில் வந்துள்ளது?
ஓஐஐஐ. நான் நேற்று அப்பம் சாப்பிட்டேன், அப்பம் ருசியாக இருந்தது. முதல் வாக்கியத்தைப் பெயரெச்சத் தொடராக மாற்றி இரண்டாவது வாக்கியத்துடன் இணைக்கவும்.
ஓஐஏ. அவர் பிரபலமான நீரிழிவு வைத்தியர். இதில் வந்துள்ள பொருள் மயக்கத்தைச் சுட்டுக.
ஓஏ. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் நல்லூரிலே அவதரித்தார். இதில் வந்துள்ள இலக்கண வழுவைச் சுட்டித் திருத்தி எழுதுக.

பகுதி ஐஐ

4. அ) அகத்திணை, புறத்திணை என்கின்ற பாகுபாட்டிற்கான அடிப்படைகளை விளக்குக.
ஆ) சங்ககாலப் பாடாண்திணை மரபு பிற்காலங்களில் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.

5. அ) பல்லவர் கால பக்தி இலக்கியச் செழுமைக்கு முற்காலம் எவ்வாறு வழிகாட்டியாய் அமைந்தது என்பதனை ஆதாரங்களுடன் விளக்குக.
ஆ) பொற்கால இலக்கியங்களில் இருந்து நாயக்கர் கால இலக்கியங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதனை விளக்குக.

6. அ) 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நாவலின் வளர்ச்சியைக் குறிப்பிடுக.
ஆ) இதில் கல்கி அல்லது தி.ஜானகிராமன் பெறும் இடத்தினை மதிப்பிடுக.

பகுதி ஐஐஐ

7. அ) போர்த்துக்கேயர் கால இலக்கியங்கள் பற்றிக் கருத்துரைக்குக.
ஆ) ஒல்லாந்தர் காலத்தில் வரதபண்டிதரின் இடத்தினை விளக்குக.

8. அ) 19 ஆம் நூற்றாண்டின் செய்யுள் இலக்கியப் போக்கினை விளக்குக.
ஆ) இதில் ஈழத்திற்குரியவர்களின் முன்னோடி முயற்சிகளை விளக்குக.


9. மேல்வருவோருள் யாரேனும் இருவர் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெறும் இடத்தினை மதிப்பிடுக.
அ) சுபைர் இளங்கீரன்
ஆ) இணுவில் சின்னத்தம்பிப் புலவர்
இ) மஹாகவி
ஈ) வித்துவசிரோன்மணி சி.கணேசையர்
உ) பண்டிதர் க. சச்சிதானந்தன்