*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்த சிறுகதைத்தொகுதி வெளிவந்துவிட்டது விலை 240 ரூபாய்.தருமராசா அஜந்தகுமார் உயர்தரமாணவர்களுக்காய்த் தொகுக்கும் உரைநடைக்கோவை விரைவில் வெளிவருகிறது *

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

க.பொ.த( உ/த) தமிழ் மாதிரி வினாத்தாள் 1

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முதலாம் பகுதி இரு வினாக்களுக்கும் இரண்டாம் பகுதியில் உள்ளவற்றில் எவையேனும் நான்கு வினாக்களுக்கும் எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடை தருக.
பகுதி 1


01. பின்வரும் செய்யுட் பகுதியில் உள்ள எவையேனும் முன்றினைத் தெரிவு செய்து
அ) அவற்றின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக.
ஆ) தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளவற்றின் சிறப்பினை எழுதுக.

1. கரை பொரு திழிதருங் கான் யாற்றிகுகரை
வேர்கிளர் மராஅத் தந்தளிர் போல
நடுங்கலானா நெஞ்ச மோடிடும்பை
யாங்கனந் தாங்குவன் மற்றே ஓங்குசெலற்
கடும்பகட்டு யானை நெடுமானஞ்சி
ஈரநெஞ்ச மோடிச் சேண் விளங்க
தேர் வீசிருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே

2.ஒருமை மகளிரைப் போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.
பெருமையுடையவ ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல்.
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்.
இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல்லவர் கட்படின்.

3. இருகதி குறுவான் அதையும் உன்னிடமே
இறக்குவன் உனைப் பரிபாலித்து
அருளவும் வணங்கித் துதிக்கவும் மிகுந்தோர்
தமை யமைத்து அருள்வன் அன்பு ஓங்கி
பெருகு பார்ப்பு அதனைத் Nதுடி வந்து அடையும்
பறவை போல் பிள்ளையைத் தேடி
வரும் அனையினைப் போல் எனது கல்க்குகள் உன்
மாட்டினில் வருகவும் புரிவேன்

4. கொம்பி நின்று நுடங்குறு கொள்கையார்
செம்பொ னின்கல ராசி திருத்தினா
ரம்ப ரத்தி னரம்பைய ரன்பொடு
மும்பர் கோனுக ரின்னமிழ் தூட்டினார்

அஞ்ச டுத்த வமளி யலத்தகப்
பஞ்ச டுத்த பரிபுரப் பல்லவ
நஞ்ச டுத்த நயனியர் நவ்வியிற்
றுஞ்ச வத்தனை மைந்தருந் துஞ்சினார்



02. ‘அ’ பகுதியிலுள்ள கவிதையை வாசித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக

அல்லது

‘ஆ’ பகுதியிலுள்ள உரைப்பகுதியை வாசித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக.
(அ)

இனிதான கனிய ளிக்கும்
இன்னிழல் மரங்கள் ஆங்கு
கனி பிழிந்தன்ன ஓசைக்
கடலலை நல்கும் புட்கள்
பனிதங்கு புல்லி னோடு
மாமிசம் உண்ணும் மாக்கள்
நனி எழிலோடு மின்னும்
நாகங்கள் யாவினுள்ளும்
மனிதா, நீ யார் இம்மண்ணில்
மதிப்புள்ள ஜந்து நீயா

ஓதிய மறைகள் உன்னை
உயர்ந்தவன் என மொழிந்தே
தோதாகி உலகும் உன்றன்
சுகத்திற்கு வளையுமென்னும்
பாதார விந்தம் சென்னி
பணித்திடும் சிருஷ்டி ! நல்ல
ஆதாரம் அமரர் உந்தன்
அடியினைக் கௌரவித்தார்
மனிதா நீ யார் இந்த மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா

ஆந்தையின் அலறலுக்கும்
அர்த்தம் நீ காணுகின்றாய்
சேர்ந்த ஓர் காகம் கத்த
சிந்தையை இழப்பாய் பூனை
பாய்ந்திடிற் பயந்து போவாய்
பல்லியின் நச்சொலிக்கே
மாய்ந்திடுவாய் உனக்கே
இவையெல்லாம் உயர்ந்ததாயின்
மனிதா நீயார்? இம்மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா?

சிங்கத்தின் கர்ச்சனைக்கும்
சிறுத்தையின் உறுமலுக்கும்
தும்பியின் பிளிறலுக்கும்
சீறிடும் பாம்பினுக்கும்
தங்கு நீர் முதலைகட்கும்
தாங்குமோ உயிர் என்றிங்கு
வந்தித்து வாழுகின்றாய்
மறையினால் உயர்வு கண்டாய் !
மனிதா நீயார்? இம்மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா?

காற்றிற்கும் பனிக்கும் நீலக்
கடலுக்கும் இடி மழைக்கும்
தோற்றிடு விசும்பினுக்கும்
தொல்புகழ் பூமித் தாய்க்கும்
ஆற்றாமல் அழிகின்றாய் உன்
அறிவுக்குள் அடக்காய் நீயோர்
நாற்றுக்குள் முளையதனால்
நானிலம் பெருமை பேசும் !
மனிதா, நீயார் ? இம்மண்ணின்
மதிப்புள்ள ஜந்து நீயா?
1. இக்கவிதை மூலம் ஆசிரியர் புலப்படுத்த விரும்பிய பிரதான கருத்து என்ன?
2.மனிதன் எவை எவற்றுக்குப் பயப்படுவதாக ஆசிரியர் கூறுகிறார்?
3. மனிதன் எப்படி இருக்கவேண்டும் என ஆசிரியர் கருதுகின்றார்?
4. ‘நாற்றுக்குள் முளையதனால் நானிலம் பெருமை பேசும் ‘ எனபதன் மூலம் ஆசிரியர் எதை எணர்த்துகிறார்?


(ஆ)
அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. யுhனை மெல்ல அசைந்து நடந்து வருவதைப் போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றம். இளம் தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும்இ பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையிலே உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரைப் பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குரிய பூரிப்பு இல்லை. ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம்முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.
அவருடைய நடையில் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்ஸாகம் இல்லை.: சோம்பலும் இல்லை. படபடப்பும் இல்லை: சோர்வும் இல்லை. அவர் மார்பில் ருத்திராட்ச கண்டி விளங்கியது.

1. புலவர் பெருமான் தொடர்பாக உமக்குள் ஏற்படும் பதிவுகள் எவை?
2. அவரைப் பற்றிக் குறிப்பிடும் மாணவர் பற்றி நீர் யாது கருதுகின்றீர்?
3. ஆசிரியரின் மொழிநடைச்சிறப்புப் பற்றிக் கருத்துரைக்குக.

பகுதி 11
03. குடி செயல்வகை என்னும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ,
அ) குடிசெயல் என்றால் என்னவென்பதும் அதற்குக் காரணமாவதும் துணையாவதும்
ஆ) குடிசெய்வார் எய்துஞ் சிறப்பு
இ) குடிசெய்வார் அதனைச் செய்யும் இயல்பும் அவர் இல்லாத குடிக்கு ஏற்படும் கதியும்
04. திருவடி சூட்டுப்படலத்தில் இராமன் இருக்கும் இடத்தை பரதன் அடைவது வரையான பகுதியில்
அ) இராமன் மீது பரதன் கொண்ட பாசமும்
ஆ) பரதன் மீது இராமன் கொண்ட நம்பிக்கையும்
இ) படைகளைக் கண்ட இலக்குவனின் கோபமும்
புலப்படுமாற்றினை விளக்குக.

05. இரட்சணிய யாத்திரிகம் சிலுவைப்பாடு பகுதியில்,
அ) யேசு பிரான் அடைந்த துன்பங்களும்
ஆ) அதைக்கண்டு பெண்கள் அடைந்த துன்பங்களையும்
இ) இவற்றை வெளிப்படுத்த புலவர் கையாண்ட அணிகளின் சிறப்பையும் விளக்குக.

06. திருத்தொண்டர் பெரிய புராண வசனம் முகவுரை என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு
அ) சைவர்கள் என்பதற்கு நாவலர் கூறும் வரைவிலக்கணம்
ஆ) திருத்தொண்டர் பெரியபுராணத்தின் சிறப்புகள்
இ) அதனைக் கற்க வேண்டியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
ஈ) நாவலரின் மொழிநடை ஆகியவற்றை விளக்குக.

07. பாற்கஞ்சி என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு,
அ) சாதாரண விவசாயக் குடும்பத்தின் ஆசாபாசங்களையும்
ஆ) அவர்களின் எதிர்பார்ப்புகள் நொருங்குதலையும்
இ) இக்கதைத் தலைப்பின் பொருத்தப்பாட்டையும்
ஈ) இச்சிறுகதையில் வெளிப்படும் கிராமிய பண்பாடுகளையும்
வுpளக்குக.

08. பாரதியாரின் உயிர் பெற்ற தமிழர் பாட்டு என்ற கவிதையை ஆதாரமாகக் கொண்டு, பாரதியாரின்
அ) சமூக சிந்தனைகளையும்
ஆ) வாழ்க்கை நோக்கையும்
இ) நூல்கள பற்றிய எண்ணத்தையும் விளக்குக

09. பின்வருவனவற்றுள் மூன்றினை விளக்குக.
அ) ஊர்க்கால் நிவந்த பாடல் பகுதி மூலம் வெளிப்படும் கைக்கிளைக் கூறுகள்
ஆ) நாச்சியார் திருமொழி பகுதியில் வெளிப்படும் ஆண்டாளின் காதல்
இ) தவப்பயன் சிறுகதையில் வெளிப்படும் நிர்மலானந்தரின் துறவு நிலை
ஈ) பிணைக்கப்பட்ட கடனை விட வெளி முதலீட்டை வரவேற்பதே நலம் கட்டுரையில் பிணைக்கப்பட்ட கடன், வெளி முதலீடு என்பதற்கான விளக்கம்
உ) பெட்டிக்கடை நாரணன் கவிதையில் நாரணன் பற்றி உம் மனதில் எழுவன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக